ஜகார்ட்டா: இந்தோனேஷியாவில் ஏற்பட்ட கடும் நில நடுக்கத்தில் அங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரை மட்டமாகியது. இதில் சிக்கி இறந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்கள் விவரம் இன்னும் அறியப்படவில்லை. இந்தோனேஷியாவின் கிழக்கு தீவு பகுதிகளில் காலை 6 மணி அளவில் திடீரென நில நடுக்கம் தாக்கியது. வீடுகள் குலுங்கின. பல கட்டடங்கள் சரிந்து விழுந்தன. இந்த நில நடுக்கம் ரிக்கடர் 7 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக இந்தோனேஷியா புவியியல் வட்டாரம் தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லாமல் முடிந்தது.
5 ஆண்டுகளுக்கு முன்னர் லட்சக்கணக்கானோர் பலி : இந்த நாட்டை பொறுத்த வரை நில நடுக்கம் அடிக்கடி ஏற்படுவது உண்டு. லட்சக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கின்றனர். கடந்த செப்டம்பர் மாதத்தில் சுமத்ரா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நில நடுக்க
இது போல் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் 9. புள்ளியாக பதிவாகியது. இதில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் இறந்தனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகள் இழந்தனர். ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர்ப்பலி அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது.© buji
No comments:
Post a Comment