ஒரு அழகிய கடலோரம்.
அலைகள் கரையில் மோதிச்சிதறும் காட்சி.
குருவும் அவரது சீடர்களும் காண்கிறார்கள்.
முதலாவது சீடனைப் பார்த்து குரு கேட்டார்,
உனக்கு என்ன தெரிகிறது?''
திரும்பத்திரும்ப வந்து மோதும் அலைகளில் விடாமுயற்சி தெரிகிறது.'
அடுத்த சீடனைக் கேட்ட போது அவன் சொன்னான்,
துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும்
கரையைப் போல் உறுதியாக நின்றால் சிதறிப் போகும்.'
குரு அமைதியாக சொன்னார்:
சில நேரங்களில் அலைகளாய் இரு;
சில நேரங்களில் கரையாய் இரு.''
No comments:
New comments are not allowed.